தாராபுரம்,
தாராபுரத்தில் அரசு பேருந்து லாரி மீது மோதியதால் 18 பேர் காயமடைந்தனர்.

நாகர்கோயிலில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை தக்கலையை சேர்ந்த பாபு ஓட்டி வந்தார். தாராபுரம் திருப்பூர் ரோடு பூளவாடி பிரிவு அருகே தேனியிலிருந்து திருப்பூர் நோக்கி விறகு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த பார்வதி (40), மேகலா (30), செல்வகனி (28), சிவமலர் (22), முத்துராஜ் (34), இசக்கியம்மாள் (40), செங்குன்றபுரத்தை சேர்ந்த ரமேஷ் (27), சாந்தா (22) சண்முகம் (60) திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த பாண்டி (32) ரவி (42) ,ஜீவன் (28), கன்னியாகுமரியை சேர்ந்த செண்பகவல்லி (44), ஜோன்சன் (56), கோவில்பட்டி மாரிமுத்து (24), திண்டுக்கல் தனபாக்கியம் (23), உத்தமபாளையம் செந்தில் (40) ஆகிய 17 பயணிகளும் பேருந்து ஓட்டுநரும் பாபுவும் பலத்த காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநர் பாபு மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: