சேலம்,
8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் – சென்னை இடையே சுமார் 277கிலோமீட்டர் தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில்தமிழக அரசு தீவிரம்காட்டி வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதற்கு மாநகர காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பாரதி தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: