திருப்பூர்,
திருப்பூர் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் புதனன்று திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் வந்தனர். இதன்பின் மாலையில் வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் இவர்களின் வேன் சென்று கொண்டிருந்தபோது, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள தாமரைக்கோவில் என்ற பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமான மோதியது. இதன்பின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் இதனையடுத்து அருகிலுள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தவிபத்து குறித்து ஊத்துகுளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply