தீக்கதிர்

வரிப்பணத்தை சூறையாடும் ஜார்க்கண்ட் அரசு..!

ராஞ்சி:
கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் அரசின் செய்தித் தொடர்புத்துறை அதிகாரி, சுற்றுலாத் துறை மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும், அதனைப் பூர்த்தி செய்து அனுப்பும் பக்தர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.