இம்பால்,

மணிப்பூரில் இன்று எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் நியூ சேலம் பகுதியில் தமெங்லாங் என்ற இடத்தில் இன்று எதிர்பாராத விதமான திடீரென நில சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.  இதில் மலை பிரதேச பகுதிகளில் இருந்த பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நில சரிவால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதில் 5 குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.  இதேபோன்று மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.  நீய்கைலுவாங் பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் இயல்பு நிலை திரும்புவதற்கு உதவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தீயணைப்பு படையினரும் மக்களுக்கு உதவ பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.  உடல்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: