சென்னை,
வீட்டுவேலைப் பெண் மகாலட்சுமி (வயது 17) கொலை வழக்கை காவல்துறை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகானந்தம், அவரது மனைவி சுஷ்மித்தா பிரியா ஆகியோர் தங்களது வீட்டு வேலைக்காக ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த மகாலட்சுமியை அழைத்து வந்துள்ளனர். 5 வருடமாக அவர் வீட்டுவேலை செய்து வந்தார்.ஜூலை 4ந் தேதி வெளியே சென்று விட்டு வீடுதிரும்பிய சுஷ்மிதா பிரியா, வீட்டுவேலைப் பெண் மகாலட்சுமி மயங்கி விழுந்துவிட்டதாக பெசன்ட்நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள், மகாலட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்தனர். மகாலட்சுமியின் மார்பகம், பின்புறம், தொடை ஆகியவற்றில் தீக்காயம் இருந்துள்ளது. உடல் முழுவதும் வெந்நீர் ஊற்றி கொடுமைபடுத்தி மகாலட்சுமியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுஷ்மித்h பிரியா, அவரது உறவுப்பெண் மித்ராஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையிலிருந்து தப்பிக்க, சுஷ்மித்தா பிரியா, தன்னுடைய 11 வயது மகனிடம் மகாலட்சுமி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும், அதனால் கோபத்தில் தாக்கியதாகவும் காவல்துறையில் கூறியுள்ளார். இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சரவண செல்வி, வி.செல்வி ஆகியோர், பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், காவல் நிலையத்தில் முறையாக சரியான முறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மகாலட்சுமி உடற்கூராய்வில், பாலியல் ரீதியான கொடுமை நடந்திருந்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிய வேண்டும். குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழும், கொத்தடிமையாக வைத்திருந்ததிற்காவும் கூடுதல் பிரிவுகளை சேர்க்க வேண்டும். மகாலட்சுமியை வேலைக்கு அனுப்பிய ஆந்திராவை சேர்ந்த சுமித்ரா கபாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: