விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ராஜசிறீ கரும்பு ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆலை மட்ட நிர்வாகி ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில பொருளார் எம்.சின்னப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டத் தலைவர் சிவராமன், பொருளாளர்கள் சௌந்தராஜன், குண்டுரெட்டியார் உட்பட பலர் கலந்த கொண்டனர்.பின்னர் விவசாயிகள் பேரணியாக வந்து ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது, காவல்துறையினர் சங்க நிர்வாகிகளையும், விவசாயிகளையும் மனு கொடுக்க விடாமல் அவர்களைதடுத்து நிறுத்தினர். பின்னர் 2 மணி நேரம் கழித்து காவல்துறையினர் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆகஸ்ட் 5 ஆம்தேதிக்குள் கரும்புவிவசாயிகளுக்கு பணபட்டு வாடாசெய்வதாக ஆலைநிர்வாகம் எழுத்து மூலம் உறுதியத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.