திருப்பூர்,
பழங்கரை ஊராட்சியில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவிநாசிலிங்கம்பாளையத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாலையில்பச்சாம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கமிட்டி உறுப்பினர் பி.தங்கமணி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.மணி வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி ஆகியோர் பழங்கரை ஊராட்சியில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

மேலும், ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழுஉறுப்பினர்கள் பி.பழனிசாமி, என்.குமரன் விஜி உள்ளிட்டோர் பேசினர். முடிவில், கிளைச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: