திருப்பூர்,
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2018க்கு வழிகாட்டி ஆசிரியர்களாக செயல்படுவோருக்கான பயிற்சி முகாம் திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு “தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பின்கீழ் உள்ளூர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 10 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வர். இந்த ஆய்விற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுநர்களாக செயல்படுவர். மேற்படி ஆய்வுகள் முதலில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மாநில மாநாட்டில் அறிஞர்கள் முன்பாக தேர்வு செய்யப்படும். மாநில அளவில் சிறந்த ஆய்வுகளாக தேர்வு செய்யப்படும் ஆய்வும், சம்பந்தப்பட்ட மாணவர்களும் அகில இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பர்.

இந்நிலையில், இந்த மாநாடுகளில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று இம்முகாமிற்கு அறிவியல் இயக்கத்தின் ஆ.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மாவட்ட கருத்தாளர் தினேஷ்குமார், உமாசங்கர், ட்ரீம் இந்தியா தலைவர் நந்தகோபால் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ரவிவர்மா வரவேற்றார். இதில் 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பல்லடம்
இதேபோல் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதனன்று நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிவர்மா வரவேற்றார். யுனிவர்சல் பள்ளி குழுமத் தலைவர் எஸ்.ராஜகோபால் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார். இதில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மாவட்ட கருத்தாளர் ஆ.ஈஸ்வரன் தினேஷ் குமார், உமாசங்கர் ஆகியோர் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.