குன்னூர்,
குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பல கடைகள் நகராட்சி நிர்ணயித்துள்ள வாடகையைவிட அதிகமாக உள் வாடகைக்கு விடப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. நாளொன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கடை வாடகையை நகராட்சிக்குக் கட்டிவிட்டு,உள் வாடைகைக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை நாளொன்றுக்கு வசூலித்து லட்சக்கணக்கில் தனி நபர்கள் லாபம் சம்பாதித்து வந்த நகராட்சி அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து இந்த கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரஸ்வதி கூறியதாவது: அனைத்து கடைகளையும் ஆய்வு செய்து, உள்வாடகைக்கு விடப்பட்ட கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து நிலையத்தில் மட்டும் நகராட்சிக்குச் சொந்தமான லாட்ஜில் 25க்கும் மேற்பட்ட அறைகள் பலருக்கு உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவற்துக்கு சீல் வைக்கும்பணி துவங்கியுள்ளது. மீதமுள்ள கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கடைகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: