காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபாகல் கிராமத்தில் செயல்படும் கல் குவாரிகளால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமாவதை தடுக்கவும், அரசின் அனுமதிக்கப் பட்ட காலம் முடிந்த நிலையில் , மீண்டும் கல்குவாரி செயல்பட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாயன்று (ஜூலை 10) ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சிறுபாகல் கிராம மக்கள் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு காஞ்சிபுரம் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் டி.சிறீதர்,சிபிஎம் நகர செயலாளர் சி.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மதுசூதனன், எம்.ஆறுமுகம், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி ஜி.வசந்தா, சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க செயலாளர் கே.ஜீவா, கப்பாரோ இந்தியா தொழிலாளர் நல சங்க நிர்வாகி பி.சசிதரன் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

சிறுபாகல் கிராமத்தில் கல் குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு கல்குவாரி லாரிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் பலர் குற்றம் சாட்டினர்.காற்று, விவசாயத்தை அழித்து தனியார் நிறுவனங்களின் லாப வெறிக்காக மீண்டும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.