பெங்களூரு;                                                                                                                                                                           கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்திலும் மைசூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்கு 35ஆயிரத்து 698கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு மூவாயிரத்து 658கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
124கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 115அடிக்குத் தண்ணீர் உள்ளது. அதேபோல் மைசூர் மாவட்டத்தில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணை முழுவதும் நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 50ஆயிரம் கன அடி நீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள் ளது. மொத்தத்தில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி யாற்றில் நொடிக்கு சுமார் 54ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து திறக்க ப்பட்டுள்ள நீர் இன்று இரவுக்குள் தமிழகப் பகுதியான பிலிக்குண்டை வந்தடையும். இதனால் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் முன்னெச்சரிக் கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.