சேலம்,
கட்டுமான நலவாரியத்தை முடக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சேலத்தில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கட்டுமான நலவாரியத்தை மத்திய, மாநில அரசுகள் முடக்கக்கூடாது. அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலார் நலவாரியத்தை செயல்படுத்திட வேண்டும். சிஐடியு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். விபத்து, மரணம் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 60வயது பூர்த்தியானவுடன் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு கட்டுமான தொழிலாளர்சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மயில்வேலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சி.கருப்பண்ணன் துவக்கி வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், சாலை போக்குவரத்து ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ தர்ணாவை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். முடிவில் கட்டுமான சங்க பொருளாளர் சி.மோகன் நன்றியுரையாற்றினார். இந்த தர்ணா போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: