கடற்படையின் தெற்கு பிரிவின் தலைமையகம் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ளது. இதில் உள்ள கப்பல் பழுது பார்க்கும் பணிமனையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் மெஷினிஸ்ட், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிட்டர், ஏசி மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பெயின்டர், பவுண்டரிமேன் மற்றும் பிளம்பர் போன்ற பணிகளில் இரண்டாண்டுகள் பயிற்சி பெறலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1.10.2018 தேதியில் 21 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 வகுப்பு தேர்ச்சியும், 65 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் விரிவான விபரங்களை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24.07.2018 ஆகும். அப்ரண்டிஸ் பயிற்சி 15.10.2018 அன்று துவங்கவுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: