சேலம்,
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு புதனன்று சேலத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்டஆட்சியர் ரோகிணி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி மாநகரின் பிரதான சாலைகள் வழியே சென்று அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நிறைவு பெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் வளர்மதி, இணை இயக்குனர் சத்யா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: