லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு காரில் வந்துள்ளனர். வழிபாடு முடிந்து ஊருக்கு திரும்பியபோது லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: