விருதுநகர்;
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் நிர்மலாதேவி. இவர், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசினார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2 இல் செவ்வாயன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவரையும் ஜூலை.24 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்பு, இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: