இந்திய ரிசர்வ் வங்கி பணக்கொள்கையினை வகுப்பது மற்றும் வங்கிகளுக்கு அனுமதியளிப்பது முறைப்படுத்துவது போன்ற முக்கியமான பணிகளைச் செய்துவருகிறது. ஆர்பிஐ 1935யில் துவங்கப்பட்டது. இதில் காலியாக உள்ள 161 கிரேடு பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்:

1. Officers in Grade ‘B’(DR)- General – காலியிடங்கள் 127
கல்வித்தகுதி; குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களு டன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

2. Officers in Grade ‘B’(DR)- DEPR-22 (Department of Economics and Policy Research)
கல்வித்தகுதி;குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் Economics / Econometrics/ Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics Course/ Finance முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Officers in Grade ‘B’(DR)- DSIM – 17 ( Department of Statistics and Information Management)
கல்வித்தகுதி:குறைந்த பட்சம் 55% மதிப்பெண் களுடன் Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics from IIT-Kharagpur/ Applidd Statistics & Informatics முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியம் அடிப்படை ஊதியம் ரூ.35,150 ஆண்டு ஊதிய உயர்வு ரூ.1750 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் பொது/ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850 ம், எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100ம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் ஜுலை 3 முதல் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள் பின்வருமாறு
இந்த அறிவிப்பினை பற்றிய விரிவான விபரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.