தமிழ்நாட்டில் பரவலாக ஆவின் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கிளை நிறுவனங்களில் தற்போது தொழிற்சாலை உதவியாளர் (பேக்டரி அசிஸ்டண்ட்) பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விபரங்கள் பின்வருமாறு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 152 இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டில் 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு 1.1.2018 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிசி, எம்பிசி, டிஎன்சி, பிசிஎம் 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐயில் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூ.50 ம் இதர பிரிவினர்கள் ரூ.100ம் செலுத்த வேண்டும். omcaavinsfarecruitment.com என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரங்கள் மற்றும் கல்வித்தகுதிகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க ஜுலை 17 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Leave A Reply

%d bloggers like this: