இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர்,கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் (ஒருநாள்) நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் 171 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல்,தனது துடிப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுரின் விளையாட்டு திறனை பாராட்டும் விதமாக அம்மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கி கவுரவப்படுத்தினார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்ட ஹர்மன்பிரீத் கவுரின் கல்வி சான்றிதழ்களை பஞ்சாப் மாநில தேர்வு வாரியம் சரிபார்த்து.ஹர்மன்பிரீத் கவுர் சமர்பிக்கபட்ட சான்றிதழில் மீரட்டில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறியது பொய்யானவை என தெரியவந்துள்ளது.
போலிச் சான்றிதழால் கடும் அதிர்ச்சியடைந்த பஞ்சாப் மாநில அரசு ஹர்மன்பிரீத் கவுரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து,12-ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு ஏற்ப கான்ஸ்டபிள் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர்இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் காரணத்தால்,அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.இருப்பினும் போலியான சான்றிதழ் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் அர்ஜூனா விருதுக்கு சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: