சென்னை;
தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை களுக்கு எதிராக போராட்டம் வலுப் பெற்ற போது, கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் தொடர் பான இந்த வழக்கு மீது கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, டாஸ்மாக் மது பானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக்
குறைக்க முடியுமா? என்றும், மதியம் 12 மணிக்கு பதிலாக 2 மணிக்கு மேல்
திறந்தால் என்ன என்று கேள்வி எழுப்பியது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தமிழக அரசு வழக்கறி ஞர் கூறியதற்கு, தாமதமாக திறப்பதால் என்ன பிரச்சனை? டாஸ்மாக் கடை திறப்பதில் என்ன கொள்கை முடிவு இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் மது பானக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று கூறி தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டதாக கூறப் பட்டதே. ஜெயலலிதா சொன்னதன்படி மேலும் கடைகள் மூடப்பட்டதா?
டாஸ்மாக் கடைகளை ஒட்டி நடக்கும் பார்கள் உரிமம் பெற்று நடக்கிறதா? என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.உரிமம் பெறாத டாஸ்மாக் பார்களை 7 நாட்களுக்குள் மூடுவ தற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக
அரசு உறுதி அளித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: