பெங்களூரு;
தொடர் மழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்புவதால் காவிரியில் நீர் திறக்க முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு, கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலம், கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கபினி அணையிலிருந்து ஏற்கெனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில், கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.

கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்புவதால் அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால், காவிரியில் ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் 36 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,533 கன அடியிலிருந்து 14,333 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: