ரியோடிஜெனீரோ:
5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி ரஷ்ய உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
பிரேசில் அணியின் அதிர்ச்சி தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர்கள் கடும் விரக்தியில் இருந்த நிலையில்,பிரேசில் அணி செவ்வாயன்று நாடு திரும்பியது.

விமான நிலையத்தில் இருந்து தனி பஸ்சில் வீரர்கள் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பஸ்சை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி சாராமரியாக தாக்க தொடங்கினர்.தகவலறிந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.காவல் துறை விரைந்து கூட்டத்தை கலைக்கவில்லை என்றால் வீரர்களின் உயிருக்கு ரசிகர்கள் உலை வைத்திருப்பார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.