சென்னை,
அயனாவரம் சாமிபக்தன் தெருவைச் சேர்ந்த ஜான் சாலமன் மனைவி அம்பிகா (27). இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிகிறார். இந்நிலையில் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் அம்பிகா செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பிற காவலர்கள் அம்பிகாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அம்பிகா விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது. அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக காவல் துறையில் நடத்திய விசாரணையில், அம்பிகாவுக்கு ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த அதிகாரி, பணியில் நெருக்கடி கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் விளைவாக அம்பிகா விஷம் அருந்தினாரா என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: