வேலூர்,
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் 58 ஏழை மாணவர்களுக்கு விஐடியில் இலவச சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு விஐடியில் பி.டெக். உள்ளிட்ட உயர்க் கல்வி இலவசமாக பயில வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 571 மாணவர்களுக்கு இந்த இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று, பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் ஒரு மாணவன், ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விஐடியில் உணவு, தங்கும் வசதியுடன் இலவசமாக உயர்கல்வி பயில ஸ்டார்ஸ் என்ற திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

விஐடி நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு இலவச சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி விஐடியில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஜி.விசுவநாதன் 58 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன்,பதிவாளர் கே. சத்தியநாராயணன், விஐடி சிஎஸ்ஆர்டி மற்றும் ஆர்எஸ்மையத்தின் பேராசிரியர் சுந்தரராஜன், பேராசிரியை எஸ்.மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.