கடலூர்,
பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் கொஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த டி. தனசேகரன் மாற்றுத்திறனாளி அவருடைய குடும்பத்தினரின் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடாக தேவநாதன் என்பவர் பட்டா பெற்று அபகரித்துக் கொண்டார்.

தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போலி ஆவணங்கள் தயாரித்துட உதவிய பண்ருட்டி துணை தாசில்தார் தணபதியை பணி நீக்கம் செய்யக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ள ராமநாதனை வெளியேற்றி தனசேகரன் குடும்பத்தினரின் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார் பொருளாளர் கணேசன், துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், தட்சிணாமூர்த்தி, வசந்தி, திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநில பொருளாளர் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: