காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் நகராட்சியில் புதிய வரிதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் திங்களன்று (ஜூலை 9) நடைபெற்றது.

நகரக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர்கள் ஒய். சீதாராமன், முன்னாள் கவுன்சிலர் இராமநாதன் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை துவக்கி வைத்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பேசினார். பின்பு நகரக் குழு செயலாளர் சி.சங்கர் தலைமையில் புறப்பட்ட ஊர்வலத்தை அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது
செய்தனர். பின்னர் கட்சியின் மாவட்டத்தலைவர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்து மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை வழங்கிப் பேசினர். உயர்த்தப்பட்ட வரியை திரும்பப்பெற வேண்டும் என்றும், முன்தேதியிட்டு பெறப்பட்ட தொகையினை திரும்பக் கழித்துக் கொண்டு கணக்கினை நேர் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆணையர் சர்தார், வரிகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.நேரு, ஆர்.சௌந்தரி, நகரக் குழு உறுப்பினர்கள் கே.ஜீவா, இ.சங்கர், ஜி.லட்சுமிபதி மற்றும் கிளை செயலாளர் கே.ரகுபதி உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.