துருக்கியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்கேரியா நாட்டின் எடிர்னே பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள ஹால்காலி ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. 376 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்களுடன் சென்றுகொண்டிருந்தனர். ரயில் தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரயிலின் ஆறு பெட்டிகள் எதிர்பாராத விதமான தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்தவிபத்தில் சிக்கி 24 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு துணை பிரதமர் ரிசெப் அக்டாக் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் 124 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி ராணுவம் மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: