டோக்கியா,
ஜப்பானில் கன மழைக்கு 90 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களில் சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும். இதனால் அந்த பகுதியை விட்டு மொத்தம் 18 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழைக்கு தற்போது வரை 90 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200 பேரைக் காணவில்லை. 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் பல லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்ட இருக்கிறார்கள். பலத்த மழைக்கு நடுவே அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.
மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: