திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று வாராந்திர குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இதல் 27 ஆவது வார்டுபொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் சுமார் 85 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில், சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்துவீடுகள் கட்டியுள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் சாலையை கடப்பதற்க மிகவும் சிரமாக உள்ளது. மேலும், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர், தாராபுரம் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் நீலாங்காளிவலசில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றோம். எங்களுக்கு ஆழ்துழாய் கிணறு மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வருவதில்லை. இதுகுறித்து மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், நேரிலும் மனுவில் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தினோம். எனவே, குடிநீர் வசதியை மேம்படுத்தி, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

முதியோரை காப்பகத்தில் ஒப்படைக்ககோரி மனு:
நியூ தெய்வா சிட்டி சார்பில் கொடுக்கப்பட்ட மனு கூறியிருப்பதாவது: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களாக ஈஸ்வரன், ராஜாமணி ஆகியோர் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு உறவினர் இல்லாதால், தாங்களை ஏதேனும் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுமாறு கூறினர். இந்நிலையில் பல மூதியோர் இல்லத்தில் சேர்க்க விசாரித்ததில், எந்த காப்பகத்திலும் இடம் கிடைக்க வில்லை. எனவே, முதியோர்களை காப்பகத்தில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆவண செய்யுமாறு மனுவில் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.