விளையாட்டு உலகிற்கு தற்போது உலகக்கோப்பை கால்பந்து ஜுரம் அடித்து கொண்டிருப்பதால்,பல்வேறு வகையான விளையாட்டு தொடர்களை ரசிகர்கள் கடந்த ஒரு மாதகாலமாக மறந்துவிட்டனர்.ரசிகர்கள் மறந்த முக்கியமான விளையாட்டு போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளும் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தான்.3 டி-20,3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் டி-20 தொடரில் விளையாடியுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும்,இரண்டாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்ற நிலையில்,ஞாயிறன்று நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா (100 ரன்கள்) சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ரோஹித் சர்மா புதிய சாதனைகள்:
1.சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் வரிசையில் நியூஸிலாந்து வீரர் காலின் முன்றோவுடன் (3 சதம்) ரோஹித் சர்மா முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.2.தனிநபர் அதிகபட்ச ரன்களில் ரோஹித் சர்மா மூன்று விதமான சாதனைகளை சமன் செய்துள்ளார்.
100 ரன்களுக்கு மேல் : ரோஹித் சர்மா,காலின் முன்றோ (3 முறை)
75 ரன்களுக்கு மேல் : ரோஹித் சர்மா,கெய்ல் (8 முறை)
50 ரன்களுக்கு மேல் : ரோஹித் சர்மா,கோலி (18 முறை)
3.டி-20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடக்கும் 5-வது வீரர் என்ற சிறப்பு பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

 

தோனியும் சாதனை: 
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியும் 3 விதமான சாதனைகளை படைத்துள்ளார்.1. 500 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பு பெருமையை தோனி பெற்றார். 

2. டி-20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர்.
3. மூன்றாவது டி-20 ஆட்டத்தில் 5 கேட்சுகள் பிடித்ததன் மூலம்,ஒரே ஆட்டத்தில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற புதிய மைல் கல்லை தோனி எட்டியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 4 கேட்ச் பிடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.