குருசேத்ரா:
இனிவரும் தேர்தல்களில் பாஜக-வின் 90 சதவிகித வேட்பாளர்களுக்கு தோல்விதான் கிடைக்கப் போகிறது என்று பாஜக எம்.பி. ஒருவரே பேசியுள்ளார்.ஹரியானா மாநிலம் குருசேத்ரா மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராஜ்குமார் சைனி என்பவர்தான் இவ்வாறு பேசியுள்ளார்.‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில், குருசேத்ரா தொகுதிக்கு உட்பட்ட திகாவ் கிராமத்தில் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ராஜ்குமார் சைனியும் கலந்து கொண்டுள்ளார். அப்போதுதான் பாஜக-வின் தோல்வி ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளார்.

பேரணியில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஊழலும் அதிகரித்து உள்ளது. வெறும் பேச்சில் வேலையில்லாத் திண்டாட்டம் தீராது. அதேபோல, பேச்சின் மூலமே ஊழலையும் ஒழித்துவிட முடியாது. இதற்கு தீர்வுகாண அனைத்து மட்டங்களிலும் பொருத்தமான வேலைத்திட்டம் வேண்டும்.

ஆனால், பாஜக-வுக்கு அரசியலில் தற்போது சரியான குறிக்கோள் இல்லை. அத்துடன் சரியான அரசியலை பாஜக நடத்துவதும் இல்லை. இதன்காரணமாக இனிவரும் சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக-வின் 90 சதவிகித வேட்பாளர்களுக்கு தோல்விதான் கிடைக்கப் போகிறது.இவ்வாறு ராஜ்குமார் சைனி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.