நாமக்கல்,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி. பணிக்காலியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி, மொத்த பணிக்காலியிடம் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த பணிக்காலியிட அறிவிக்கை www.omcaavinsfarecruiment.comஎன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் விபரங்களை முழுமையாகவும், கவனமாகவும் படித்து தகுதியும், விருப்பமும் உள்ள மனுதாரர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வலைதளம் வாயிலாக ஜூலை 16 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.