திருப்பூர்,
திருப்பூரில் அரசு செட்-டாப் பாக்ஸ் பொருத்துவற்கு உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர் ரூ.1000 பணம் தரும்படி கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் வாடிக்கையாளர் புகார் கொடுத்தார்.

திங்களன்று திருப்பூர் ரங்கநாதபுரம் கொடிகம்பம் மூர்த்தி லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஆட்சியரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: மிகவும் வறிய நிலையில் உள்ள தன்னிடம் அரசு செட்-டாப் பாக்ஸ் இணைப்புக் கொடுப்பதற்கு அப்பகுதி கேபிள் டிவி ஆப்ரேட்டர் ரூ.1000 தர வேண்டும் எனக் கேட்பதாகவும், பணம் கொடுக்காத நிலையில் கேபிள் இணைப்பைத் துண்டிப்பதாகவும் புகார் கூறினார். அரசு இலவசம் என அறிவித்திருக்கும் நிலையில் பணம் கேட்டு கட்டாயப்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: