திருப்பூர்,
விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுநர்களிடம் ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீரபாண்டி பிரிவில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. திருப்பூர் தெற்கு , பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாகனங்கள் பதிவுசெய்வதற்கும், பெயர்மாற்றம், ஓட்டுனர் உரிமம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானமாக வருகிறது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்வதின் மூலம் அபராத தொகை வசூலிக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரையில் நடந்த வாகனச்சோதனையில் வரி கட்டாதது, அதிக பாரம் ஏற்றியது, சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது. இதற்காக 340 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்து 970 அபராதம் வசூலிக்கப்பட்டது என தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: