கோவை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை அன்னூரில் ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்டத்தில் முன்னணி ஊழியர்களாக பணியாற்றியவர்கள் குமார் மற்றும் ஆனந்தன் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாரயத்திற்கு எதிராக போராடியதால் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் நினைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆண்டுதோரும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. வாலிபர் சங்கமும் அன்னூர் ஆரம்பசுகாதார நிலையமும் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு அப்பகுதி நிர்வாகி லோகேந்திரன் தலைமை தாங்கினார். அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காளியப்பன் முகாமை துவக்கிவைத்து உரையாற்றினார். வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஒன்றியச் செயலாளர் சரவணன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன் மற்றும் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 61 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.