சேலம்,
மோட்டார் தொழிலாளர்களுக்கு பாதகமான சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்ட சிஐடியு சாலைபோக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் 6வது ஆண்டு பேரவை விபி சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பி.முருகேசன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் கோவிந்தராஜ் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், பொருளாளர் டி.வேலுமணி ஆகியோர் அறிக்கை முன் வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் சுந்தரம், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எ.கோவிந்தன், ஆட்டோ சங்க செயலாளர் எம்.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.

முன்னதாக, இம்மாநாட்டில் மத்திய அரசு என்றுமில்லாத அளவிற்கு கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையைகுறைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த மோட்டார் தொழிலாளர்களுக்கு பாதகமான சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும். வெளிமாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். சேலம் மாவட்டத்தில் இயங்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான இடவசதி செய்து தரவேண்டும். சேலம் மாவட்டத்தில் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பரிசோதனை என்ற பெயரில் ஓட்டுநர்களை மிரட்டுவதும் பணம் கேட்பது தொடர்கதையாக உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆர்டிஓ பரிசோதனை என்ற பெயரில் தொடர்ச்சியாக அவர்களிடம் பணம்பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

இதனை தடுக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் புதிய தலைவராக எஸ்.கே.தியாகராஜன், செயலாளராக டி.உதயகுமார், பொருளாளராக வேலுமணி உள்ளிட்டு 19 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டை சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி நிறைவுயுரையாற்றினார். எஸ்ஆர்சி சங்க செயலாளர் ஜி.எஸ்.மாதப்பன் நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: