ஈரோடு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் ஸ்தாபன தீர்மானங்கள் குறித்த சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உரையாற்றினார். அரசியல் ஸ்தாபன குறித்து மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.எம் .முனுசாமி, எஸ். முத்துச்சாமி, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் சத்தி, மலைக் கமிட்டி, கோபி, அந்தியூர் ஆகிய இடைக் கமிட்டி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: