மேட்டுப்பாளையம்,
பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு மாற வேண்டிய மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.

மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்து இச்சட்டம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு மாற வேண்டிய நேரமிது என்பதை வலியுறுத்தியும், இயற்கை சூழலுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற க்ராஸ் கன்ட்ரி ரேஸ் என்னும் மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. சுவாமி சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் பந்தயத்தை கவிஞர் கவிதாசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அண்மையில் திருப்பூரில் பிளாஸ்டிக் இல்லா திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மாணவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டி பேசிய கவிதாசன், இது போல நாம் அனைவரும் நம் இல்லங்களில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்பை துவக்க முன்வர வேண்டும் என்றார்.

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் துவங்கி நீலகிரி மலையடிவாரமான கல்லார் வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.