தேனி,
கேரள மாநிலம் கொச்சி மகாராஜாஸ் கல்லூரியில் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் இடுக்கி மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்யுவின் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டத் தலைவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர்கள் ஆறுதல் கூறினர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர் எம்.பி.நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசி மூலம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இடுக்கி மாவட்டம் மூணாறு வட்டவடமலைகிராமத்தில் வசித்து வந்த தோழர் அபிமன்யுபழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற கட்சி மற்றும் சங்கத் தலைவர்கள், அபி மன்யுவின் தந்தை ஆர்.மனோகரன், தாயார் பூபதி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போடி தாலுகாக்குழு உறுப்பினராக இருந்து செயல்பட்ட மறைந்த தோழர் எஸ்.ஆர்.ரகுபதியின் தம்பி மகன்தான் தோழர் அபிமன்யு. இச்சந்திப்பில், சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு, எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி, மாவட்டச் செய லாளர் நாகராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.லெனின், மூணாறு ஏரியா தலைவர் பாசில், பொருளாளர் பிரவீன், ஏரியாக்குழு உறுப்பினர் ரஞ்சித், எஸ்எப்ஐ மூணாறு செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்து, தோழர்அபிமன்யு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் மாணவர்களும் வாலிபர்களும் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

உறுதியேற்பு:
அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிடிமண்ணை எடுத்த இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி மற்றும் நிர்வாகிகள், தோழர் அபிமன்யுவின் பிடி மண்ணுடன் தமிழகம் முழுவதும் மதவெறிக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்துவோம் என்று உறுதியேற்றுக்கொண்டனர்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.