கோவை,
செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21 வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் ஞாயிறன்று துவங்கியது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் 21 வது தேசிய அளவிலான கார் பந்தயம் போட்டியில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 60 க்கும் மேற்பட்ட வீர்ர்கள் பங்கேற்று எல்.ஜி.பி பார்மூலா 4, யூரோ ஜே.கே.18 ஆகிய கார்பந்தயங்களும் சுசுகிஇரு சக்கர வாகன பந்தயங்களும் நடைபெற்றது. தொழில்நுட்ப காரணமாக சனியன்று நடைபெறாத யூரோ ஜே.கே 18 ஞாயிறன்று நடைபெற்றது. நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் டார்க் டான் ரேசிங் அணியை சேர்ந்த டெல்லி வீரர் ரோகித் கண்னா முதலிடத்தையும், அவிலான்ச்சி ரேசிங் அணியை சேர்ந்த சித்தேஷ் மண்டோடி இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இரண்டாவது போட்டியில் எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடத்தையும், அவிலான்ச்சி ரேசிங் அணியை சேர்ந்த சித்தேஷ் மண்டோடி இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். யூரோ ஜே.கே.18 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் இலங்கை வீரர் பிரையன் பெரேரா முதல் இடத்தையும், மும்பை வீரர் நயன் சாட்டர்ஜி இரண்டாம் இடமும், சென்னை வீரர் அச்வின் தத்தா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இரண்டாவது போட்டியிலும் இவர்களே முன்னிலை வகித்தனர். மூன்றாவது போட்டியில் சென்னை வீரர் கார்த்திக் தரணி முதலிடமும், மற்றொரு சென்னை வீரர் அஸ்வின் தத்தா இரண்டாம் இடமும், நயன் சாட்டர்ஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும், யூரோ ஜே.கே.18 மூன்றாவது பந்தயம் துவங்கும் முன்பு மழை பெய்த காரணத்தால் ஓடுதளத்தில் ஈரப்பதம் ஏற்பட்ட காரனத்தால் போட்டி துவங்க தாமதமாகியது. இதனை தொடர்ந்து வெட் ரேஸ் போட்டிகளில் ஈரபதத்தையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை ஹவுரா அணி வீராங்கனை மேகா முதல் முறையாக பங்கேற்று எல்.ஜி.பி.பார்முலா 4 கார் பந்தயத்தில் 17வது இடத்தை பிடித்திருந்தார். மற்றொரு கோவை வீராங்கனை லீ தரண் 18வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடதக்கது.

Leave A Reply

%d bloggers like this: