இராமநாதபுரம்,
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்த படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.