நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சத்துணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.17 கோடி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவுப்பொருட்களை விநியோகம் செய்கின்ற நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு ஆண்டிபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வருமான வரித்துறையினர் அந்தத் தனியார் நிறுவன கிளைகளில் சோதனையிட்டு கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெற்ற சோதனையில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உள்பட 17 கோடி ரூபாய் சிக்கியுள்ளன. 10 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான எந்த தகவலையும் வருமான வரித் துறையினர் தெரிவிக்கவில்லை.

Leave A Reply

%d bloggers like this: