திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. ஆனால் அருவிகளில் வழக்கத்தை விட தண்ணீர் குறைவாகவே விழுந்தது. கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால்,குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால்,அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றுவீசியது இரவில் குளிர்ந்த காற்றும் வீசியது. எனினும் சுற்றுலா பயணிகளின்வருகைஅதிகரித்து இருந்தது.

Leave A Reply

%d bloggers like this: