தருமபுரி,
சேலம் சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக போராடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இன்று தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது
எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் தாமாக முன்வந்து நிலத்தை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் விவசாயிகளை போராடத் தூண்டியதாக கூறி பால பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.