ஜெய்ப்பூர்;
ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவதற்கு, அம்மாநில பாஜக அரசானது, 7 கோடி ரூபாயை வாரி இறைத்து செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சாதனை விளக்கக் கூட்டங்கள் என்ற பெயரில் அரசுப் பணத்திலேயே பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனொரு பகுதியாக, ராஜஸ்தான் பாஜக அரசின் சாதனையை விளக்குவதற்காக ஜெய்ப்பூரில் சனிக்கிழமையன்று, பிரதமர் மோடியையே அழைத்து வந்து வசுந்தரா ராஜே கூட்டம் நடத்தினார்.இந்நிலையில், மோடியின் இந்த கூட்டத்திற்கு ஆள்சேர்க்க ரூ. 7 கோடியை வசுந்தரா ராஜே அரசு வாரி இறைத்திருப்பது தெரியவந்துள்ளது. மோடியின் பொதுக்கூட்டத்துக்காக ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் இருந்தும் ஆள் திரட்டப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 600 பேருந்துகள் மூலம் அவர்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான பணி கடந்த 2 நாட்களாக நடந்துள்ளது. இதற்காக ராஜஸ்தான் மாநில அரசு 7 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு தலா ரூ. 20 விகிதம் பணம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.பாஜக அரசின் இந்த செயலுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: