தூத்துக்குடி;
நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசுகளை சாடினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் கூட்டம் சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடியில் நடந்தவற்றையும் நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: