பால்டிமோர் (அமெரிக்கா):
அமெரிக்கா சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பால்டிமோரில் செயல்பட்டுவரும் வைராலஜி ஆய்வு நிறுவனம் பாராட்டு விழா நடத்தியது. நிபா வைரசை கட்டுப்படுத்துவதில் உலகத்துக்கே முன்மாதிரியாக கேரள அரசு செயல்பட்டதாக முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆய்வகத்தின் நிறுவனரும் மருத்துவ ஆராய்ச்சியாளருமான டாக்டர். ராபர்ட் சி.கேலோ பரிசளித்து பாராட்டு தெரிவித்தார்.முன்னதாக ராபர்ட் கெலோயும் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் முதல்வர் பினராயி விஜயனுடனும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுடனும் கேரளத்தில் நிபா வைரசை கட்டுப்படுத்தியது குறித்து விவாதித்தனர். ஆராய்ச்சித் துறையில் கேரள அரசின் ஒத்துழைப்புடன் திருவனந்தபுரத்தி்ல் அமையவிருக்கும் சர்வதேச வைராலஜி நிறுவனத்தின் செயல்பாடு குறித்தும் விவாதித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் டாக்டர். ராபர்ட் சி.கேலோ, நிறுவனத்தின் கிளினிக்கல் வைராலஜி இயக்குநர் சியாம்சுந்தர் கொட்டிலில் ஆகியோர் பேசினர். முதல்வர் பினராயி விஜயனும் அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசினர்.கேரளத்தின் சுகாதாரத்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சர்வதேச அளவிலான மிக உயர்ந்த விருதினை, இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் வைராலஜி நிறுவனத்திடமிருந்து முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் பெற்றுள்ளனர். 1996 இல் அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

நிபா வைரசை கட்டுப்படுத்தியதில் கேரள அரசு மேற்கொண்ட மிக முக்கியமான – விரைவான நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகே முதல்வர் பினராயி விஜயனை அழைக்க இந்நிறுவனம் முடிவு செய்தது. ஹியூமன் வைராலஜியில் உலக அளவில் ஐஎச்வி என்பது புகழ் பெற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.