சென்னை;
தேனா வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. வங்கியின் உயிர் மூச்சை நிறுத்தும் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக அகில இந்திய தேனா வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தேனா வங்கி நட்டத்தில் இயங்குவதால், வாடிக்கையாளர்களுக்கு வேளாண், கல்வி, நகைக்கடன் உள்ளிட்ட எவ்வித கடன்களும் வழங்கக்கூடாது என்று கடந்த மே மாதம் 8 ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதனை எதிர்த்து சனிக்கிழமையன்று (ஜூலை 7) நாடு முழுவதும் அந்த வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை தி.நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஊழியர் சி.பி.கிருஷ்ணன், ஒரு கோடி வாடிக்கையாளர்களுடன் 31 மாநிலங்களில், 600 மாவட்டங் களில் 1,834 கிளைகளுடன் தேனா வங்கி செயல்பட்டு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் 400 கிராமங்களில் தேனா வங்கி மட்டுமே செயல்படுகிறது என்றார்.

ஏழை மக்களுக்கு சேவை செய்து வரும் தேனா வங்கியை முடக்கும் வகையில், கடன் கொடுக்கக்கூடாது என்று என்று உத்தரவிட்டிருப் பது அந்த வங்கியை கொலை செய்வதற்கு ஒப்பாகும். புதிதாக ஊழியர் நியமனத்திற்கும் ரிசர்வ் வங்கி தடை வித்துள்ளது. தேனா வங்கியின் நிர்வாகம் 80 கிளைகளை மூட ஆணையிட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வாராக்கடன் அதிகமாகி தேனா வங்கி நட்டத்தில் இயங்குவதா கவும், சொத்து மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. ரிசர்வ் வங்கி வைத்துள்ள அளவீடுகள் சரியானதல்ல. வங்கிகள் அதிக லாபம் ஈட்டினாலும், மத்திய அரசு, ரிசர்வ் வங்கியும் வகுக்கும் கடன் கொள்கைகளால் வாராக்கடன் அதிகரித்து பல வங்கிகள் நட்டத்தை சந்திக்கின்றன. தேனா வங்கியை விட மோசமான நிலையில் சில வங்கிகள் உள்ளன. ஆனால், தேனா வங்கியை மட்டும் தனிமைப்படுத்தி தாக்குகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.