ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம்  மாவட்டத்தில் உள்ள ரெட்வானி பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது ஒரு கும்பல் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 16-வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூட்டில் பலியான மூன்று பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளது. அனைவரும் குல்காமில் உள்ள ஹவூரா பகுதியைச்சேர்ந்தவர்கள் ஆவர்.
இதைத்தொடர்ந்து தற்போது குல்காம், அனந்தநாக் ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.